ரூ.34ஆயிரம் கோடி ஜிஎஸ்டி வரி ஏய்ப்பு! அதிகாரிகள் ஆய்வு!

டெல்லி: மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ள ஜிஎஸ்டி வரித்திட்டதில் வணிகர்கள் பலகோடி மோசடி செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.ஒரேநாடு ஒரே வரி என்ற முழக்கத்துடன் ஜிஎஸ்டி வரி அறிமுகப்படுத்தப்பட்டது.
இதில் வரி ஏய்ப்புக்கே இடமில்லை என்று கூறப்பட்டது.
இதுவரை வரி ஏய்ப்பில் ஈடுபட்டவர்கள் அந்த தொழில் நடவடிக்கைகளை கைவிட்டு ஜிஎஸ்டி செலுத்தி தாராளமாக தொழிலை தொடரலாம்.

அவர்கள் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாது என்றும் தெரிவிக்கப்பட்டது.
இருந்தபோதும் 2017ஜூலை முதல் டிசம்பர் வரையிலான நடப்பு நிதியாண்டில் ரூ.34ஆயிரம் கோடிக்கு வரி ஏய்ப்பு நடந்துள்ளது.
ஜிஎஸ்டி ஆணையம் இதுகுறித்து தெரிவித்துள்ளது.
ஜிஎஸ்டி அமலானதில் இருந்து தொழில்துறையினர், வணிகர்கள், சேவை தொழில்செய்வோர் தங்கள் நிறுவனத்தை ஜிஎஸ்டி இணையதளத்தில் பதிவுசெய்து மாதந்தோறும் ரிட்டன் தாக்கல் செய்யவேண்டும்.

வெளியூரில் இருந்து வரும் சரக்குகளுக்கு நிகரவரி மட்டுமே வணிகர்கள் செலுத்திவருகின்றனர்.
ஒவ்வொரு ஊரிலும் பல வர்த்தகர்கள் படிவங்கள், நிகரவரி தாக்கல் செய்யாமல் இருப்பதாகவும் தெரியவந்துள்ளது.

இதனால் ஜிஎஸ்டி வரிவசூலை முழுமையாக கணிக்கவோ கண்காணிக்கவோ முடியாத நிலை உள்ளது.
நடப்பு நிதியாண்டின் முதல் ஆறு மாதகாலத்தில் சுமார் ரூ.34ஆயிரம் கோடிக்கு வரிஏய்ப்பு நடந்துள்ளதாக அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.
இது குறித்த ஆய்வை அவர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here