இடைத்தேர்தல் முடிவுகள் எதிரொலி! பாஜகவை எதிர்க்கப்போவது யார்?

லக்னோ: உத்தரப் பிரதேச மாநிலம் கோராக்பூர், பூல்பூர் ஆகிய மக்களவை தொகுதிகளில் நடைபெற்ற இடைத்தேர்தலில் பாஜக தோல்வி அடைந்துள்ளது.

உ.பி.முதல்வர் யோகி ஆதித்ய நாத் 5முறை வெற்றிபெற்ற தொகுதி கோரக்பூர். அவர் முதல்வராக பதவியேற்றதும் தனது எம்பி பதவியை ராஜினாமா செய்தார். அதேபோன்று துணைமுதல்வர் கேசவ்பிரசாத் மவுரியாவின் பூல்பூர் தொகுதிக்கும் இடைத்தேர்தல் நடைபெற்றது.

இன்று வாக்குகள் எண்ணிக்கை தொடங்கியதும் சமாஜ்வாதி வேட்பாளர்கள் தொடர்ந்து முன்னணியில் இருந்தனர். அவர்களே வெற்றியும் பெற்றனர்.
பல்பூரில் நாகேந்திரபிரதாப்சிங் படேலும், கோரக்பூரில் பிரவீன்குமாரும் வெற்றிபெற்றனர்.
இத்தேர்தல் முடிவை ஏற்பதாக தெரிவித்துள்ள யோகி ஆதித்யநாத், சமாஜ்வாதி, பகுஜன்சமாஜ்வாதி கட்சிகள் கூட்டணியால் இந்த வெற்றி அவர்களுக்கு கிடைத்துள்ளது.
அக்கூட்டணி மாநிலத்தின் வளர்ச்சிக்கு நல்லதல்ல என்றார்.இதேபோன்று பிகாரில் நடைபெற்ற பேரவை தேர்தலில் லாலுபிரசாத் யாதவின் ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சி ஒரு மக்களவை மற்றும் பேரவை தொகுதியில் வென்றது. ஒரு பேரவை தொகுதியில் பாஜக வென்றுள்ளது.

இந்த இடைத்தேர்தல் முடிவுகள் தேசிய அரசியலில் பாஜகவுக்கு எதிரான வலுவான கூட்டணியை அமைக்க உதவும்.
எதிர்க்கட்சி கூட்டணி காங்கிரஸ் தலைமையில் அமையுமா அல்லது மூன்றாவது அணியாக மாநிலக்கட்சிகள் ஒருங்கிணைத்து அமைக்குமா என்ற கேள்வி அரசியல் அரங்கில் எழுந்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here