பி.எஸ்.என்.எல். முறைகேடு வழக்கு! மாறன் சகோதரர்கள் விடுவிப்பு!!

சென்னை: பிஎஸ்.என்.எல். முறைகேடு வழக்கில் முன்னாள் அமைச்சர் தயாநிதி மாறன், அவரது சகோதரர் கலாநிதி மாறன் ஆகியோர் விடுவிக்கப்பட்டுள்ளனர்.கலாநிதி மாறனுக்கு சொந்தமான டிவி அலுவலகத்தில் முறைகேடாக பி.எஸ்.என்.எல். நிறுவனத்தின் இணைப்புகள் பயன்படுத்தப்பட்டன. தயாநிதி மாறன் தனது இல்லத்தில் டெலிபோன் எக்ஸ்சேஞ்ச் போன்ற அமைப்பை ஏற்படுத்தியிருந்தார். இதனால் அரசுக்கு ரூ.1.78கோடி நஷ்டம் ஏற்பட்டதாக புகார் எழுந்தது.மத்திய தொலைத்தொடர்பு அமைச்சராக தயாநிதி மாறன் பணியாற்றிய 2004 ஜூன் முதல் 2006டிசம்பர் வரை இம்முறைகேடு நடந்ததாக குற்றம் சாட்டப்பட்டது.இதுதொடர்பாக சிபிஐ விசாரித்து மாறன் சகோதரர்கள் மற்றும் சன் டிவி ஊழியர்கள், பிஎஸ் என் எல் அதிகாரிகள் உள்ளிட்ட 9பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.
சென்னை சிபிஐ நீதிமன்றத்தில் இதுதொடர்பான வழக்கு நடந்துவந்தது.தங்கள் மீதான குற்றச்சாட்டுகளை மறுத்த மாறன்சகோதரர்கள் இது புனையப்பட்ட வழக்கு என்றும் நீதிமன்றத்தில் வாதிட்டனர்.
இன்று சிபிஐ நீதிமன்ற நீதிபதி நடராஜ், பிஎஸ் என்.எல். முறைகேடு வழக்கில் மாறன் சகோதரர்கள் மற்றும் குற்றம்சாட்டப்பட்ட 7பேரையும் விடுவித்து உத்தரவிட்டார்.இந்நிலையில், தேசிய பங்குச்சந்தையில் சன் டிவி பங்குகள் விலை உயர்ந்தன.
வர்த்தக தின முடிவில் சன் டிவி பங்குகள் ரூ.43.75 அதிகரித்து ரூ.944ஐ எட்டின.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here