விமான பயணியிடம் நூதன திருட்டு! பெண் காவலர் கைது!!

பாங்காக்:விமான பயணியின் பையில் திருடும் பெண் போலீஸ்காரரின் விடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
பாங்காக்கில் உள்ள சுவர்ணபூமி விமானநிலையத்தில் காவலாராக பணியாற்றுபவர் புசகர்ன்(26).இவர் பயணிகளின் லக்கேஜ்களை சோதனையிடும் எக்ஸ்ரே மெஷினை கண்காணிக்கும் பணியில் உள்ளார்.
சம்பவத்தன்று பயணி ஒருவரின் கைப்பை எக்ஸ்ரே மெஷின் வழியாக வந்தது.
அதில் பணம் இருப்பதை மெஷின் காட்டிக்கொடுத்தது.

இதனைத்தொடர்ந்து அப்பையை எடுப்பதுபோல் நடித்த புசகர்ன் அதில் இருந்த பணத்தை எடுத்தார்.
எதுவும் தெரியாததுபோல் கன்வேயர் பெல்டில் அந்த பையை வைத்துவிட்டார்.
பைக்கு சொந்தமான சீனப்பயணி பையில் பணம் இல்லாதது தெரிந்து அதிர்ச்சி அடைந்தார்.
உடனடியாக அங்குள்ள போலீசில் புகார் செய்தார்.

போலீசார் கண்காணிப்பு கேமராக்களை சோதனையிட்டனர்.
புசகர்னின் நடவடிக்கைகள் சந்தேகத்தை ஏற்படுத்தின. அவரை சோதனையிட்டதில் உள்ளாடையில் 4ஆயிரம் யென் மதிப்புள்ள சீன கரன்சியை மறைத்துவைத்திருந்தது தெரியவந்தது.
அவர் கைது செய்யப்பட்டார். இதுதொடர்பான விடியோ இணையத்தில் வெளியாகி உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here