சோயாபால் அருந்தும் குழந்தைகளுக்கு ஆபத்து!

நியூயார்க்:குழந்தைகளுக்கு தாய்ப்பாலுக்கு பதில் சோயா பால் தருவது கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்துகிறது.
தாய்ப்பாலுக்கு பதில் பசும்பால் கொடுப்பது வழக்கம். தற்போது சோயாபால் உலகெங்கும் அதிகளவில் விற்பனையாகிறது.தாய்மார்களும் குழந்தையின் 6மாதங்கள் வரையில் சோயா பாலை அளிக்கின்றனர்.
ஐரோப்பாவில் இவ்வாறு கொடுக்கக்கூடாது என்று பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்பட்டு
சோயாபால் விற்பனை கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.ஆனால், அமெரிக்காவில் 30சதவீதம் பெண்கள் குழந்தைகளுக்கு சோயாபால் தருகின்றனர்.
இதுகுறித்து நியூயார்க் குழந்தைகள் மருத்துவர் சங்கம் ஆய்வில் ஈடுபட்டது.
2003ல் பிறந்த 283குழந்தைகள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன.
70குழந்தைகளுக்கு தாய்ப்பால், 111குழந்தைகளுக்கு பசும்பால், 102குழந்தைகளுக்கு சோயாபால் வழங்கப்பட்டது.
தற்போது குழந்தைகளை மீண்டும் டாக்டர்கள் பரிசோதித்தனர்.

அதில் சோயாபால் குடித்த குழந்தைகளின் இனப்பெருக்க உறுப்புகளில் பாதிப்பு இருப்பது தெரிந்தது.
ஈஸ்ட்ரோஜென் ஹார்மோன் ஏற்றத்தாழ்வால் அக்குழந்தைகளின் பிறப்பு உறுப்புகள் சற்று பெரிதாக காணப்பட்டன. ஆனால், அவற்றின் உள்பகுதி மிகவும் சிறிதாக காணப்பட்டன.
இதனால், பெண் குழந்தைகள் பூப்புஅடையும்போது பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளது என டாக்டர்கள் எச்சரிக்கின்றனர்.ஆண் குழந்தைகளின் விதைப்பைகள் சிறுத்து காணப்படுகின்றன என்றும் டாக்டர்கள் தெரிவிக்கின்றனர்.

குழந்தைகள் உடல் தாயின் உடலில் இருந்து இயல்பாக பெறும் லாக்டோசை செரித்து சக்தியாக கிரகிக்கும். தாய்ப்பால் கிடைக்காத குழந்தைகளுக்கு தரப்படும் பசும்பால் இதே செய்கையை பக்கவிளைவுகள் இன்றி செய்கின்றன என்றும் டாக்டர்கள் தெரிவிக்கின்றனர்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here