சோனியா காந்தி விருந்து! 20கட்சி தலைவர்கள் பங்கேற்பு!

டெல்லி: காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவி சோனியாகாந்தி அளித்த விருந்தில் 20கட்சிகளை சேர்ந்த தலைவர்கள் பங்கேற்றனர்.காங்கிரஸ் இல்லாத இந்தியாவை உருவாக்குவோம் என்று பாஜக முழங்கி பல மாநிலங்களில் ஆட்சியை பிடித்தது.

திரிபுராவில் கம்யூனிஸ்ட் ஆட்சியை மாற்றி காவிக்கொடி பறக்கவிட்டுள்ளது பாஜக. தற்போது கேரளத்தில் மட்டுமே கம்யூனிஸ்ட் ஆட்சி நடைபெறுகிறது.  விரைவில் கம்யூனிஸ்ட் கட்சிகளே இந்தியாவில் இருக்காது என்று பாஜக தலைவர்கள் பேசிவருகின்றனர்.

இந்நிலையில், அசுரபலம் மிக்க பாஜக வுக்கு எதிராக அனைத்து கட்சிகளும் ஓரணியில் இடம்பெறுவது தவிர்க்க இயலாததாக உள்ளது.

மம்தா பானர்ஜி, கம்யூனிஸ்ட்கள் மேற்கொண்ட 3வது அணி முயற்சியிலும் பின்னடைவு ஏற்பட்டது.   இதனால் பாஜக அதற்கு எதிரான வலுவான ஒரு அணி என்று  இரு அணிகள் அரசியலில் ஏற்படுவதற்கான சாத்தியம் ஏற்பட்டுள்ளது.அதன் துவக்க நிகழ்ச்சியாக சோனியாகாந்தி இன்று தனது வீட்டில் அனைத்து கட்சி தலைவர்களையும் விருந்துக்கு அழைத்தார்.  கம்யூனிஸ்ட் கட்சி, பகுஜன் சமாஜ், மஜத, திமுக உள்ளிட்ட 20கட்சி தலைவர்கள் விருந்தில் பங்கேற்றனர்.

திமுக சார்பில் மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி விருந்தில் பங்கேற்றார். இது அரசியல் விருந்தல்ல.  எதிர்க்கட்சிகள் அனைவரும் அரசியலுக்கு அப்பால் நட்புணர்வோடு இருக்கவேண்டும் என்பதற்காக நடைபெற்ற விருந்து என்று தெரிவித்தார் காங்கிரஸ் செய்தி தொடர்பாளர்.

சரத்பவார், உமர் அப்துல்லா, பத்ருதின் அஜ்மல், அஜித்சிங் உள்ளிட்ட தலைவர்கள் விருந்தில் பங்கேற்று ஆச்சர்யம் தந்தனர். தெலங்கானா, ஆந்திராவில் இருந்து பிரதிநிதிகள் இடம்பெறாமல் ஆச்சர்யம் தந்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here