Connect with us

Business

சேமிப்பு கணக்கு வைத்திருப்போருக்கு எஸ்பிஐ வங்கி சலுகை!

Published

on

மும்பை:பாரத ஸ்டேட் வங்கியின் சேமிப்பு கணக்கில் குறைந்தபட்ச தொகை இருப்புத்தொகை வைத்திருக்காவிட்டால் அபராதம் விதித்து வந்தது.ஐந்தாண்டுகளுக்கு பின்னர் நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ-ல் இத்திட்டம் நடைமுறைக்கு வந்தது.
இந்த அறிவிப்பு வாடிக்கையாளர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.நகரங்கள், பெருநகர் வங்கிக்கிளைகளில் கணக்கு வைத்திருப்போர் ரூ.5ஆயிரம் வைத்திருக்க வேண்டுமென்ற கட்டாயம் பின்னர் ரூ.3ஆயிரம் என குறைக்கப்பட்டது.
இந்த அபராத தொகை மூலமாக பலநூறு கோடிகள் சம்பாதித்தது எஸ்பிஐ.
இதனைத்தொடர்ந்து இவ்விதிமுறையில் மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளது. அபராதத்தொகை 75%குறைக்கப்பட்டுள்ளது.

நகர்ப் பகுதியில், குறைந்த பட்ச இருப்புத்தொகை வைத்திருக்காவிட்டால் ரூ.15 மற்றும் ஜிஎஸ்டி கட்டணம்., வசூலிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
நடுத்தர நகர வங்கி மற்றும் புறநகர் வங்கிகளின் வாடிக்கையாளர்கள், குறைந்தபட்ச இருப்புத்தொகை பராமரிக்காவிட்டால், ரூ.12 அபராதத்துடன் ஜிஎஸ்டி கட்டணம் வசூலிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Copyright © 2017 Zox News Theme. Theme by MVP Themes, powered by WordPress. Shared By Fancy Text Generator