மனைவிக்கு திருமணம் செய்துவைத்த வாலிபர்!

ஒடிசா: திருமணம் முடிந்து ஆறுநாட்கள் சென்றபின் மனைவியை காதலருடன் சேர்த்துவைத்துள்ளார் கணவர்.
இந்த ஆச்சர்ய சம்பவம் நடந்துள்ளது ஒடிசா மாநிலத்தில் உள்ள ஜார்சுடுடா நகரில்.பாமரா கிராமத்தைச் சேர்ந்தவர், பாசுதேவ் டாப்போ. இவருக்கும் ஜார்சுடுடாவைச் சேர்ந்த தேப்தி என்கிற பெண்ணுக்கும் கடந்த 4-ம் தேதி திருமணம் நடந்தது.
திருமணம் நடந்து 6 நாள்களில் தேப்தியின் உறவினர்கள் பிரதான் உட்பட 3 பேர் வந்தனர்.

அதில் இருவர், பாசுதேவை அழைத்துக்கொண்டு வெளியே சென்றனர்.
அந்தச் சமயத்தில், பிரதானுடன் தேப்தி நெருக்கமாக அமர்ந்து பேசிக்கொண்டிருந்ததை பாசுதேவின் உறவினர்கள் பார்த்து கண்டித்தனர்.
பாசுதேவுக்கு இவ்விபரம் தெரியவந்தது.
மனைவியிடமும், பிரதானிடமும் நடந்ததை விசாரித்தார்.

திருமணத்துக்கு முன்பு பிரதானும் தேப்தியும் காதலித்துவந்தது தெரியவந்துள்ளது.
மேலும், தேப்திக்கு உறவினர்கள் கட்டாயத்திருமணம் செய்துவைத்ததும் தெரிந்து அதிர்ச்சியானார்.
தனது மனைவிக்கும், அவர் காதலருக்கும் திருமணம் நடத்திவைக்க முடிவெடுத்தார். இரு வீட்டாரிடமும் பேசி திருமணம் செய்துவைத்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here