அரசியலில் குதித்த நடிகையின் சொத்து 5ஆண்டுகளில் இரு மடங்கானது!

மும்பை:இந்தி திரையுலகில் நடித்துவரும் நடிகையும், எம்பியுமான ஜெயாபச்சனின் சொத்து விபரம் தெரியவந்துள்ளது.

மாநிலங்களவை உறுப்பினராக வேட்புமனு தாக்கலின்போது அவர் அளித்துள்ள பிரமாணப்பத்திரத்தில் இதுதொடர்பான விபரம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமாஜ்வாதி கட்சி சார்பில் மீண்டும் மாநிலங்களவைக்கு போட்டியிடுகிறார் ஜெயாபச்சன்.
அதற்காக வேட்புமனு, பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்தார்.அதில் ஜெயாபச்சனுக்கும், அவரது கணவர் அமிதாப்பச்சனிடமும் உள்ள சொத்து விபரங்களை தெரிவித்துள்ளார்.
இருவரிடமும் ரூ.463 கோடி சொத்துக்கள், நகை, பணம், கார் உள்ளிட்டவை ரூ.540 கோடிக்கு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில் ஜெயாபச்சனிடம் இருக்கும் தங்க நகைகள் மதிப்பு மட்டும் ரூ. 62 கோடியாகும், அமிதாப்பின் நகைகள் மதிப்பு ரூ.36 கோடி எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜெயாபச்சனும், சொந்தமாக ரூ.3.4 கோடி மதிப்பிலான கைக்கடிகாரங்களும், அமிதாப்புக்கு ரூ.51 லட்சத்திலும் உள்ளன. ஜெயாபச்சனிடம் இருக்கும் பேனா மதிப்பு ரூ.9 லட்சமாகும்.
அமிதாப், ஜெயாபச்சனிடம் மொத்தம் 12 விலை உயர்ந்த கார்கள் உள்ளன.ஐந்தாண்டுகளுக்கு முன்னர் இவர் தாக்கல் செய்த மொத்த சொத்துக்களின் மதிப்பு ரூ.412கோடி என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here