வனப்பகுதியில் உள்ள கோவில் செல்ல பக்தர்களுக்கு கட்டுப்பாடு!

சென்னை: தமிழகத்தில் வனப்பகுதியில் உள்ள வழிபாட்டு இடங்களுக்கு செல்ல விதிமுறைகள் கடுமையாக்கப்பட்டுள்ளன.

குரங்கணி மலையில் காட்டுத்தீயால் ஏற்பட்ட விபத்தைத் தொடர்ந்து, தமிழகத்திலுள்ள அனைத்து மலை வனப்பகுதிக்குள் செல்ல விதிகள் கடுமையாக்கப்பட்டுள்ளன.
குரங்கணியில் ஏற்பட்ட காட்டுத்தீயில் சிக்கிய, மலையேற்றப் பயிற்சிக்குச் சென்ற 11பேர் மரணமடைந்தனர்.

மலையேற்றப் பயிற்சிக்கு கோடை காலத்தில் செல்ல அனுமதிக்கப்பட மாட்டாது என்று அரசு அறிவித்துள்ளது.
இந்த நிலையில், விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிப்புத்தூர் அருகே உள்ள பிரசித்திபெற்ற சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவில், குற்றாலம் தேனருவியில் உள்ள மலைக்கோவில், பாபநாசம் மலையில் உள்ள அத்திரிமகரிஷி கோவில் உள்ளிட்ட மலைக்கோவில்களுக்கு செல்ல விதிமுறைகள் கடுமையாக்கப்பட்டுள்ளன.

வனப்பகுதியில் உள்ள வழிபாட்டு இடங்களுக்கு செல்ல காலை 5 மணி முதல் மாலை 4 மணி வரை மட்டுமே மக்கள் அனுமதிக்கப்படுவர்.
தீவிர சோதனை, மற்றும் உயிர்காக்கும் உபகரணங்கள் பக்தர்கள் குழுவிடன் இருக்கவேண்டும் என்றும் நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here