தென்மாநிலங்களை புறக்கணிக்கும் மத்திய அரசு! சந்திரபாபு நாயுடு பகிரங்க புகார்!!

ஹைதராபாத்:தென்மாநிலங்களில் வரிவசூலித்து வடமாநில வளர்ச்சிக்கு பயன்படுத்துகிறது என்று மத்திய அரசை முதன்முறையாக விமர்சித்துள்ளார் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு.ஆந்திரமாநில வளர்ச்சிக்கு சிறப்பு நிதி, தலைநகர் வளர்ச்சிக்கு நிதியுதவி, ஸ்மார்ட் நகரங்கள் உருவாக்குவதில் முன்னுரிமை உள்ளிட்ட விஷயங்களில் ஆந்திராவின் கோரிக்கைகளுக்கு மத்திய அரசு செவிசாய்க்கவில்லை.
இதனைத்தொடர்ந்து மத்திய அமைச்சரவையில் இருந்து தெலுங்கு தேசம் ராஜினாமா செய்தது.

இந்நிலையில், சட்டப்பேரவையில் மத்திய அரசை கண்டித்து உரையாற்றியுள்ளார் முதல்வர் சந்திரபாபு நாயுடு.
ஆந்திர மாநிலம் பிரிக்கப்பட்டபோது, நமக்கு அளித்த வாக்குறுதிகள் எதையும், பாஜக அரசு நிறைவேற்றவில்லை. மாறாக ஆந்திர மாநிலத்தை நிராகரித்து விட்டது.தொழில்துறைக்கான ஊக்கத்தொகை, ஜிஎஸ்டி மறுநிதி ஆகியவை மற்ற மாநிலங்களுக்கு அளிக்கப்படும் போது ஆந்திர மாநிலத்துக்கு மறுக்கப்படுகிறது.

இந்தியாவில் ஆந்திர மாநிலம் இல்லையா என்று நான் கேட்கிறேன். ஏன் இப்படி பாகுபாடு காட்டப்படுகிறது.மத்திய அரசின் பணம், மாநில அரசின் பணம் என்று எடுக்கக்கூடாது, மாறாக மக்களின் பணம் என்றே எடுக்க வேண்டும்.தெலங்கானா மக்களின் உணர்வுகளைப் புரிந்துகொண்டுதான் ஆந்திர மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து கொடுக்கவில்லை என்று அருண் ஜேட்லி கூறுகிறார். அதே மக்களின் உணர்வுகளின் அடிப்படையில்தான் நாங்கள் சிறப்பு நிதித்தொகுப்பும், சிறப்பு அந்தஸ்தும் கேட்கிறோம். இவ்வாறு அவர் பேசினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here