வங்கி கணக்குடன் ஆதார் இணைக்க மேலும் அவகாசம்!

டெல்லி: ஆதார் வழக்கில் தீர்ப்பு வரும்வரை  ஆதார் எண்ணை வங்கி கணக்கு, மொபைல் எண்களுடன் இணைப்பதற்கான அவகாசத்தை நீட்டித்து உத்தரவு பிறப்பித்துள்ளது உச்சநீதிமன்றம்.

ஆதார் எண் அவசியமா, அதில் தனிமனித உரிமைகள் மீறப்படுகிறதா என்பது தொடர்பான வழக்குகளை ஒருங்கிணைத்து உச்சநீதிமன்றம் விசாரித்து வருகிறது.

தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அரசியல் சாசன அமர்வு ஆதார் வழக்கை விசாரித்து வருகிறது.

இந்நிலையில், ஆதார் அட்டை அனைத்து சேவைகளுக்கும் கட்டாயமென்று அறிவுறுத்திய மத்திய அரசு அதற்கான காலக்கெடுவை மார்ச்31ம் தேதிவரை அளித்திருந்தது.

இந்த அவகாசம் மேலும் நீட்டிக்கப்பட வேண்டுமென்று பல்வேறு அமைப்புகள், வணிக நிறுவனங்கள் கோரிவந்தன.

இந்நிலையில் உச்சநீதிமன்றம் இன்று பிறப்பித்த இடைக்கால உத்தரவில் ஆதார் எண்ணை வங்கிக்கணக்கு, மொபைல் எண்ணுடன் இணைப்பதற்கு கட்டாயப்படுத்தக்கூடாது.  ஆதார் வழக்கில் தீர்ப்பு வரும்வரை இணைப்புக்கு அவகாசம் தரப்பட வேண்டும்.

மேலும், அட்டவணை 7ன் கீழ்வரும் மத்திய, மாநில அரசுகளின் நிதி, மானியம் பெறும் திட்டங்களில் ஆதார் எண் இணைப்பது கட்டாயம் என்பதை இந்த உத்தரவு கட்டுப்படுத்தாது என்றும் தெரிவித்துள்ளது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here