சவுதி மாணவி காரில் கடத்தல்! ஹீரோவாக செயல்பட்டு மீட்டார் தொழிலதிபர்!

சவுதிஅரேபியா: காரில் கடத்தப்பட்ட மாணவியை துரிதமாக செயல்பட்டுசவுதி தொழிலதிபர் மீட்டுள்ளார்.
அபா நகரில் உள்ள நூலகத்துக்கு அங்குள்ள தொழிலதிபர் தலால் சத் அல் ஷரானி சென்றுள்ளார்.
அவர் நூலகத்தில் இருந்து திரும்பும்போது மழை பெய்தது.  இதனால் மழை சற்று ஓயட்டும் என்று காத்திருந்தார்.அவர் நின்றுகொண்டிருந்த பகுதியில் இருந்த அடுத்த வாசலில் 15வயது மதிக்கத்தக்க ஒரு மாணவி நின்றுகொண்டிருந்தார்.
அங்கு காரில் வந்த வாலிபர் வலுக்கட்டாயமாக அப்பெண்ணை காரில் ஏற்றிச்சென்றார்.

இதனைத்தொடர்ந்து அக்காரை தனது காரில் தொடர்ந்தார் தொழிலதிபர் அல் ஷரானி.
சுமார் 10கிமீ தூரம் சென்றதும், தனது காரின் முன்பக்க கேமராவை இயக்கி முன்னாள் செல்லும் காரில் என்ன நடக்கிறது என்று கவனித்தார்.
அவர் சந்தேகப்பட்டது சரியாகவே இருந்தது. காருக்குள் அம்மாணவி போராடிக்கொண்டிருந்தார்.

உடனடியாக போனில் போலீசாரை அழைத்த அல் ஷரானி காருக்குள் மாணவி சிக்கியிருப்பதை புகார் தெரிவித்தார்.

போலீசார் மாணவி கடத்திவரப்பட்ட காரை நிறுத்தினர். அதில் இருந்த வில்லன் போலீஸ் பிடியில் இருந்து தப்பமுயன்றார். அல் ஷரானி உதவியுடன் போலீசார் அவ்வாலிபரை பிடித்தனர்.
அல் ஷரானியை மண்டல போலீஸ் அதிகாரி பாராட்டி சான்றிதழ் வழங்கியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here