கடலில் குழந்தை பெற்ற பெண்! வைரல் புகைப்படங்கள்!

எகிப்து: செங்கடலில் குழந்தை பெற்ற பெண்ணின் புகைப்படங்கள் வைரலாக உலகம் முழுவதும் பகிரப்பட்டு வருகின்றன.
சோவியத் ரஷ்யா உடைந்தபின்னர், ரஷ்ய மக்கள் வெளிநாடுகளுக்கு சுற்றுலா செல்வது அதிகரித்து வருகிறது.

கடற்கரை நகரங்களையே அவர்கள் அதிகம் தேர்வு செய்கின்றனர். குடும்பத்துடன் ஆண்டுக்கு ஒருமுறை அந்த இடங்களுக்கு சுற்றுலா செல்வதை வழக்கமாக கொண்டுள்ளனர்.
எகிப்தில் உள்ள கடற்கரை நகரங்கள் ரஷ்யர்களின் சுற்றுலா சொர்க்கநகரங்களாக விளங்குகின்றன.

எகிப்தின் சினாய் நகருக்கு சுற்றுலாவந்த கர்ப்பிணிப்பெண் செங்கடலில் குளித்துக்கொண்டிருந்தபோது பிரசவ வலியால் துடித்தார்.
அவர் தங்கியிருந்த விடுதியில் உள்ள டாக்டர் உதவிசெய்ய அப்பெண் கடலில் ஆண் குழந்தை பெற்றார்.
அவர் குழந்தையை கரைக்கு கொண்டுவந்தது அவருடன் சுற்றுலா வந்தவர்களால் படமெடுக்கபட்டு இணையத்தில் பதிவிடப்பட்டுள்ளது.பிரான்ஸ், ரஷ்யா, எகிப்து நாடுகள் தண்ணீர் பிரசவம் பிரபலமாக உள்ளது.
கர்ப்பிணி தண்ணீரில் குழந்தைபெறும் இம்முறையால் தாய்க்கும், சேய்க்கும் மிகவும் நல்லது என்று கூறப்படுகிறது.
1970களில் பிரான்ஸில் டாக்டர் பிரடரிக் என்பவர் அறிமுகப்படுத்திய இம்முறை தற்போது உலகம் முழுவதும் பிரபலமாகி உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here