தரையில் விமானம் மோதி தீ விபத்து!

காத்மாண்ட்: நேபாள் நாட்டு தலைநகரில் விமானம் தரையில் மோதி விபத்துக்குள்ளானது. அதில் விமானத்தில் இருந்த பலரும் இறந்தனர். 6பேர் மீட்கப்பட்டுள்ளனர்.

நேபாளாத்தை தலைமையிடமாக கொண்டு அமெரிக்கா-பங்களா விமான நிறுவனம் இயங்கி வருகிறது. இந்நிறுவனம் சார்பில் சிறிய ரக பாம்பர்டியர் விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன.உள்நாட்டு விமான சேவையில் இந்நிறுவனம் அதிகளவில் விமானங்கள் இயக்கி வருகிறது.  இந்நிலையில், இன்று டாக்கா நகரில் இருந்து காத்மாண்டுவுக்கு வந்த விமானம் ஒன்று தரையிறங்க முயற்சித்தது. 

அப்போது என்ஜினில் கோளாறு ஏற்பட்டு அவ்விமானம் வழிதவறி விமான நிலையம் அருகில் இருந்த மைதானத்தில் மோதியது.   மோதிய விமானம் தீ பிடித்து எரிந்தது.

விபத்து நடந்த இடத்தில் இருந்து 6பேர் மீட்கப்பட்டதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. விமானத்தில் 71பேர் பயணித்துள்ளனர்.  துணை ராணுவம் உதவியுடன் மீட்புப்பணிகள் நடைபெற்று வருகின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here