திகார் சிறையில் கார்த்தி சிதம்பரம்!

டெல்லி: கார்த்தி சிதம்பரத்தை 12 நாள் நீதிமன்ற காவலில் திகார் சிறையில் அடைக்க டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.ப.சிதம்பரம் நிதி அமைச்சராக இருந்த போது அன்னிய முதலீடுக்கான தடையில்லா சான்றிதழுக்கு ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனத்திடம் ரூ10 லட்சம் லஞ்சம் வாங்கியதாக அவரது மகன் கார்த்தி சிதம்பரம் மீது குற்றம்சாட்டப்பட்டது.இந்த வழக்கில் கார்த்தி சிதம்பரம் கைது செய்யப்பட்டார்.  அவரை டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிபிஐ விசாரித்தது.
விசாரணை முடிந்து மீண்டும் ஆஜர்படுத்தப்பட்ட அவரை நீதிமன்ற காவலில் வைக்க வேண்டுமென்றும், அவரிடம் விசாரணை தொடர அனுமதிக்கவேண்டுமென்றும் கோரிக்கை விடுக்கப்பட்டது.

அதனை ஏற்று கார்த்தி சிதம்பரத்தை திகார் சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.
மார்ச்24வரை அவர் சிறையில் இருப்பார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here