நவாஸ் ஷெரிப் மீது செருப்பு வீச்சு!

லாகூர்: பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரிப் மீது செருப்பு வீசிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
லாகூரில் மதபோதகர் முப்தி முகமது ஹூசைன் நயீமியின் நினைவு தின கூட்டம் நடந்தது.அதில் பங்கேற்று பேச நவாஸ் ஷெரிப் வருகை தந்தார்.
மேடையில் அவர் பேசுவதற்கு தயாரானார். அப்போது ஒரு ஷூ பறந்துவந்து அவரது இடது காதை பதம்பார்த்தது.

உடனடியாக அக்கூட்ட அரங்கில் பரபரப்பு ஏற்பட்டது. நவாஸ் ஷெரிப் மீது ஷூ வீசிய நபரை அங்கிருந்தவர்கள் தாக்கினர். பின்னர் போலீசில் அவர் ஒப்படைக்கப்பட்டார்.

இச்சம்பவத்தை தொடர்ந்து சுருக்கமாக தனது உரையை முடித்துக்கொண்ட நவாஸ் ஷெரிப், உடனடியாக அங்கிருந்து கிளம்பினார்.

நேற்று முன் தினம் பொதுநிகழ்ச்சி ஒன்றில் வெளியுறவுத்துறை அமைச்சர் கவாஸா ஆசிப் மீது மை ஊற்றி எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
இவ்வாறு அமைச்சரை அவமானப்படுத்திய நபரை போலீசார் கைது செய்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here