ரிசர்வ் வங்கிக்கு கள்ளநோட்டுகள்! வங்கி மேலாளர் மீது வழக்கு!!

மும்பை: கான்பூர் வங்கியில் இருந்து கள்ளநோட்டுக்கள் ரிசர்வ் வங்கிக்கு அனுப்பிவைத்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக வங்கிக்கிளை மேலாளர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

பணம் வாபஸ் திட்டம் அறிமுகப்படுத்தியதும் வங்கிகள், தபால் நிலையங்களில் பழைய கரன்சி நோட்டுக்கள் வாங்கப்பட்டு புதிய நோட்டுக்கள் அளிக்கப்பட்டன.
அப்போது பழைய நோட்டுக்களில் கோடிக்கணக்கான ரூபாய் கள்ளநோட்டுக்கள் வந்துள்ளன.இதனால் அதிர்ச்சியடைந்த ரிசர்வ் வங்கி இதுதொடர்பாக விசாரித்தது.
அதில், வங்கிமேலாளர்கள் முறைகேடாக இவ்வாறு செய்தது தெரியவந்தது.
இதனைத்தொடர்ந்து கான்பூர் எஸ்பிஐ வங்கிக்கிளை மேலாளர் மீது போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது.கடந்த வாரம், வங்கிப்பணத்தை ரிசர்வ் வங்கி விதிமுறைகளின்படி சரியாக கையாள்வதில்லை என்று எஸ்பிஐ வங்கிக்கு ரூ.40லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here