ரிஷிகேஷில் ரஜினி ஆன்மிக பயிற்சி!

ரிஷிகேஷ்: நடிகர் ரஜினிகாந்த் இமாச்சல பிரதேசம் பாலம்பூரில் உள்ள ஆஸ்ரமத்தில் தங்கி ஆன்மிக பயிற்சிகள் மேற்கொண்டு வருகிறார்.
அரசியலில் களமிறங்கியுள்ள நடிகர் ரஜினிகாந்த். அதற்கான அஸ்திவாரத்தை பலமாக போடும்விதமாக மாவட்டம்தோறும் ரஜினிமன்ற நிர்வாகிகளை நியமித்து வருகிறார்.
இந்நிலையில், சனிக்கிழமை அவர் இமயமலைக்கு கிளம்பி சென்றார்.
விமானத்தில் இமாச்சல பிரதேசத்தில் உள்ள கங்கரா நகர் வந்தார்.
அங்கிருந்து பாலம்பூர் மாவட்டம் கன்ட்படி கிராமத்தில் உள்ள மகாவதார் பாபா ஆசிரமத்தில் தங்கியுள்ளார்.
அங்கு அவர் தியானம் உள்ளிட்ட ஆன்மிக பயிற்சிகளில் 10நாட்கள் செய்வார் என்று தெரிகிறது.

ஆசிரமத்தில் இமாச்சல பிரதேச முன்னாள் முதல்வர் பிரேம்குமார் துமால், ரஜினியை சந்தித்தார்.
இன்று நிருபர்களை சந்தித்த ரஜினி கூறுகையில், ஆன்மிக பயணமாக இங்கு வந்துள்ளேன். இந்த பயணம் சிறப்பாக உள்ளது. வழக்கத்தை விட வேறு மாதிரியாகவும், புனிதமானதாகவும் உள்ளது. இங்கு அரசியல் பேச விரும்பவில்லை என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here