குவைத், அமீரகத்தில் தொழிலாளர் சட்டம் கடுமையாகிறது!

குவைத்:வெளிநாட்டினருக்கு வேலை வழங்க குவைத் அரசு புதிய விதிமுறைகளை அறிவித்துள்ளது.
வெளிநாட்டில் இருந்து எந்த வேலைக்காக குவைத் வருகிறார்களோ அந்த வேலைக்காக அரசு அறிவித்துள்ள உடல் தகுதி முழுமையாக இருக்க வேண்டும்.
அப்போது மட்டுமே குவைத்தில் தங்கி பணியாற்றுவோருக்கு அனுமதி கிடைக்கும்.

வெளிநாட்டில் இருந்து வருவோ சர்க்கரைநோய், ரத்த அழுத்தம், கேன்சர், தொற்றுநோய் பாதிப்புக்கு உள்ளாகி இருந்தால் அவர்களுக்கு பணிவாய்ப்பு மறுக்கப்படும்.
மேலும் 22 நோய்களை பட்டியலிட்டுள்ளது குவைத் சுகாதாரத்துறை.

இதில் ஏதேனும் ஒரு நோயின் பாதிப்பு இருந்தால் அவர்களுக்கு நிரந்த குடியுரிமை வழங்கப்படாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.சிறுநீரக பாதிப்பு, கண்பார்வை பாதிப்பு ஆகியவையும் 22நோய்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ளது.
வெளிநாட்டவர்களுக்கான வேலைவாய்ப்பை ஒழுங்குபடுத்த 2001ல் வளைகுடா நாடுகள் முன்வந்தன.

அப்போது எடுக்கப்பட்ட முடிவுகள் தற்போது தீவிரமாக அமல்படுத்தப்படுகின்றன என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.                                                                                 அரபு நாடுகளின் காப்பீட்டு திட்டத்தை வெளிநாடினர் தவறாக பயன்படுத்துவதை தொடர்ந்து இப்புதிய விதிமுறைகள் நடைமுறைப்படுத்தப்படுகின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here