முன்பதிவு செய்த ரயில்டிக்கெட்டை மற்றவருக்கு மாற்றித்தரலாம்!

மும்பை: ரயில்பயணத்தை ரத்து செய்ய நேர்ந்தால் நீங்கள் ரிசர்வ் செய்த டிக்கெட்டை மற்றொருவருக்கு எளிதாக மாற்றித்தரும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
ரயில்களில் பயணம் செய்வோர் சில மாதங்களுக்கு முன்னரே திட்டமிட்டு பயணச்சீட்டை முன்பதிவு செய்து எடுத்துவைப்பது வழக்கம்.

எதிர்பாராத காரணங்களால் சில நேரங்களில் பயணத்தை தொடரமுடியாமல் போகும்.
அப்படிப்பட்ட இக்கட்டான நேரங்களில் முன்பதிவு செய்துள்ள டிக்கெட்டை மற்றொரு நபருக்கு இனி மாற்றித்தரலாம்.
ரயில் நிலையங்களில் முன்பதிவு நிலையங்களில் இருக்கும் தலைமை கண்காணிப்பாளரே ரயில் டிக்கெட்டை யாருக்கு மாற்ற வேண்டும் என்பதை முடிவுசெய்வார்.

அரசுமுறை பயணத்துக்கான டிக்கெட்டாக இருந்தால் ஒருநாள் முன்னதாக எழுத்துப்பூர்வமாக தெரிவிக்க வேண்டும். யார் பெயருக்கு டிக்கெட்டை மாற்றித்தரவேண்டும் என்றும் பரிந்துரைக்க முடியும்.
சாதாரண பயணிகள் ஒரு நாளுக்கு முன்னர் எழுத்துப்பூர்வமாக தெரிவித்து குடும்பத்தினருக்கு டிக்கெட்டை மாற்றித்தரலாம்.சுற்றுலா செல்ல மொத்தமாக டிக்கெட் பதிவுசெய்துள்ளவர்கள் 2நாள் முன்னதாக டிக்கெட்டை மாற்றிக்கொள்ள முடியும்.
திருமணம், கேம்ப் ஆகியவற்றுக்கு செல்வோர் ஒரு நாள் முன்னதாக டிக்கெட்டை சமர்ப்பித்து மற்றொருவருக்கு மாற்றித்தந்து உதவலாம்.
இதனால் டிக்கெட்டை சமர்ப்பிப்பவருக்கு முழுத்தொகையும் திரும்பக்கிடைக்கும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here