ஒருதலை காதலால் விபரீதம்! கல்லூரி வாசலில் மாணவி கொலை!

சென்னை: ஒரு தலை காதலின் விபரீதத்தால் கல்லூரி வாசலில் மாணவி குத்திக்கொலை  செய்யப்பட்டார்.

சென்னை கே.கே.நகரில் உள்ள தனியார் கல்லூரியில் பிகாம் முதலாண்டு படித்துவந்தார் அஸ்வினி.அவரை ஒரு தலையாய் காதலித்துவந்தார் சுகாதார துறை பணியாளர் அழகேசன்.   அழகேசனின் தொல்லையால் கல்லூரி விடுதியை காலிசெய்து உறவினர் வீட்டில் தங்கி படித்துவந்தார் அஸ்வினி.
இந்நிலையில் இன்று மதியம் கல்லூரி வாசலில் அஸ்வினி வழிமறித்தார் அழகேசன். மறைத்து எடுத்துவந்திருந்த கத்தியால் சரமாரியாக குத்தினார். 

 

ரத்தவெள்ளத்தில் சரிந்துவிழுந்த அஸ்வினி உயிரிழந்தார். அஸ்வினியின் சத்தம் கேட்டு ஓடிவந்த அப்பகுதி மக்கள், மாணவர்கள் அழகேசனை பிடித்தனர்.

அவரை கடுமையாக தாக்கி போலீசில் ஒப்படைத்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here