ஷாப்பிங் மோசடி! மொரிஷியஸ் பெண் அதிபர் ராஜினாமா!

மொரிஷியஸ்: மொரிஷியஸ் நாட்டின் முதல் பெண் அதிபரான அமீனா குருப் ஊழல் புகாரில் சிக்கி தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

அமீனா குரூப் விஞ்ஞானி ஆவார். 2014ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் வெற்றிபெற்று 2015ம் ஆண்டு முதல் அதிபர் பதவியில் உள்ளார்.

இவர் கடந்த இரண்டு ஆண்டுகளாக பலமுறை வெளிநாட்டு பயணங்கள் மேற்கொண்டார்.

அப்போது ஒரு கிரடிட் கார்டை பயன்படுத்தி பொருட்களை வாங்கி குவித்துள்ளார்.  துபாய், லண்டன் நகரங்களில் இவர் அந்த கார்டை பயன்படுத்தி கோடிக்கணக்கில் பொருட்கள் வாங்கியுள்ளார்.இதுகுறித்து தனியார் தொண்டு நிறுவனம் ஆய்வு செய்தது. மொரிஷியஸ் முன்னணி பத்திரிகையில் இதுகுறித்த செய்தி வெளியானது.லண்டனை சேர்ந்த ஒரு அறக்கட்டளையில் அமீனா குரூப் இயக்குநராக உள்ளார். அந்நிறுவனம் இவர் பெயரில் நிதி திரட்டியுள்ளது.  அந்நிறுவனத்தின் வங்கிக் கணக்குச்சொந்தமான கிரடிட் கார்டை அமீனா குரூப் பயன்படுத்தியுள்ளது தெரியவந்துள்ளது.    இதில் தவறு ஏதும் இல்லை என்று அமீனா கூறிவந்தார்.

இந்நிலையில், பிரதமர் கேட்டுக்கொண்டதற்கிணங்க இன்று பதவியை ராஜினாமா செய்வதாக அவர் அறிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here