23லட்சம் வாடிக்கையாளரிடம் மோசடி! ஏர்டெல் நிறுவனத்துக்கு அபராதம்!!

மும்பை:வாடிக்கையாளர் தலையில் மிளகாய் அரைத்து அரசு மானியத்தை அபேஸ் செய்த ஏர்செல் நிறுவனத்துக்கு ரூ.5கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

இந்திய ரிசர்வ் வங்கி இந்த உத்தரவை ஏர்டெல் பேமெண்ட் வங்கிமீது பிறப்பித்துள்ளது.
மேலும், ஏர்டெல் வங்கி கேஒய்சி விதிமுறைகளை பின்பற்றி கணக்கு தொடங்காமல் இருந்ததும் குற்றமாக பார்க்கப்பட்டது.
2017ம் ஆண்டு டிசம்பர் மாதம், பாரதி ஏர்டெல் நிறுவனம் வாடிக்கையாளர்களிடம் சிம்கார்டு விற்பனை செய்யும்போது அடையாள அட்டையாக ஆதார் நகலைப் பெற்றது.

அப்போது, வாடிக்கையாளர்களுக்கே தெரியாமல், அவர்களின் ஒப்புதலின்றி ஏர்டெல் பேமெண்ட் வங்கிக்கணக்கை தொடங்கியது. அதற்கான மானியத்தொகையை வாடிக்கையாளருக்கு தரமால் தன்னிடமே வைத்துக்கொண்டது.
இவ்வாறு 23லட்சம் வாடிக்கையாளர்களிடம் ஏர்டெல் நடந்துகொண்டது விசாரணையில் தெரியவந்தது.இதனைத்தொடர்ந்து ஏர்டெல் பேமெண்ட் பேங்குக்கு ரூ.5கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
விதிமுறைகளை சரிவர கடைபிடிக்கவில்லை என்பதால் ஸ்டேட்பாங்க் ஆப் இந்தியா,
ஆக்சிஸ் பேங்க், ஐஓபி வங்கிகளுக்கும் ரிசர்வ் வங்கி அபராதம் விதித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here