மோடியின் தலைமையில் நாடு பின்னோக்கி செல்கிறது! சோனியா குற்றச்சாட்டு!!

டெல்லி: ‘மோடியின் தலைமையில் நாடு பின்னோக்கிச் சென்றுகொண்டிருக்கிறது’ என்று குற்றம்சாட்டினார் சோனியா காந்தி.

இந்தியா டுடே மாநாட்டில் பங்கேற்று பேசினார் சோனியா காந்தி. அப்போது பிரதமர் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.“நரேந்திர மோடி 2014 தேர்தல் பரப்புரையின்போது நாட்டுக்குக், கொடுத்த வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றவில்லை.  நாடு இப்போது முக்கியமான காலகட்டத்தில் இருக்கிறது.

தினந்தோறும் கருத்துரிமைக்கு எதிரான மிரட்டல்களும், பதற்றங்களுமே ஆக்கிரமித்துக்கொண்டிருக்கின்றன. கருத்துச் சுந்திரம் தேய்ந்துகொண்டே வருகிறது. சகிப்புத் தன்மையின்மை அதிகரித்துக் கொண்டே செல்கிறது.இந்தச் சூழலில் தேசிய அளவில் எதிர்க்கட்சிகள் ஓரணியில் திரள வேண்டியது அவசியம். அது கடினமான பணி என்றாலும்கூட, நாட்டின் நலன் கருதி அந்த பணியை நாம் செய்ய வேண்டும்’’‘’பாஜக அரசு தனக்கு இருக்கும் அறுதிப் பெரும்பான்மையை வைத்து நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளின் குரலை நசுக்குகிறது.   அவர்களது அச்சேதினம் என்ற கோஷம் இந்தியா ஒளிர்கிறது கோஷத்துக்கான நிலையை நோக்கி சென்றுகொண்டுள்ளது.
எதிர்க்கட்சிகளின் குரல்கள் அடக்கப்படுகிறது என்றால் நாடாளுமன்றம் எதற்கு? அதை மூடிவிட்டு நாம் எல்லாரும் வீட்டுக்குப் போய்விடலாமே?

வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது நாடாளுமன்ற மரபுகள் இந்த அளவுக்குத் தகர்க்கப்படவில்லை. வாஜ்பாயைப் போல் அல்லாமல், இப்போதைய மோடி ஆட்சியில் நாடாளுமன்ற நடைமுறைகள், மரபுகள் மதிக்கப்படுவதே இல்லை’’ என்று குறிப்பிட்டார் சோனியா காந்தி.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here