சமூக ஊடகத்தில் சம்பாதிக்கும் புத்திசாலி புருவநாயகி!

கொச்சி: ஒரு அட்டகாச காதல் சினிமாவில் நடித்துள்ள புருவ நாயகி பிரியா பிரகாஷ் சமூக ஊடகத்தின் வாயிலாக பிரபலமானார்.தற்போது சமூக ஊடகம் வாயிலாக லட்சக்கணக்கில் சம்பாதித்து வருகிறார்.
மலையாளத்தில் எடுக்கப்பட்டுவரும் ஒரு அட்டகாச காதல் என்ற படத்தில் இடம்பெற்ற மாணிக்க மலரான பூவே என்ற பாடல் இணையத்தில் வெளியாகியது.
அதில் நடித்த பிரியா பிரகாஷ் புருவ சுழிப்பில் உலகமே சொக்கிப்போனது.தீபிகாபடுகோன், சன்னிலியோனை விடவும் அதிகளவில் பிரியாவை கூகுள் செய்தனர் மக்கள்.
அவரது இன்ஸ்டாகிராம் கணக்கில் ஒரேநாளில் ஆறு லட்சத்துக்கும் அதிகமானோர் இணைந்தனர். அவர்களில் ஐந்து லட்சம் பேர் பிரியாவின் ரசிகர்களாக உள்ளனர்.

தனது இன்ஸ்டாகிராம் கணக்கில் விளம்பரங்களை பதிவுசெய்ய அனுமதிக்க ரூ.8லட்சம் கட்டணமாக கேட்கிறார் பிரியா.
அட்டகாச காதல் படத்தை தொடர்ந்து பிற மொழிகளிலும் அவருக்கு படவாய்ப்புகள் வந்தன. ஆனால் படங்களில் நடிக்க தனது சம்பளத்தை கோடியில் கேட்க துவங்கியுள்ளார் பிரியா.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here