இபிஎஸ், ஓபிஎஸ் கருத்துவேறுபாடு வெளிச்சத்துக்கு வந்தது!!

சென்னை: தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கும், துணைமுதல்வருக்கும் கருத்துவேறுபாடு உள்ளது முதன்முறையாக வெளிச்சத்துக்கு வந்துள்ளது.திரிபுராவில் லெனின் சிலை அகற்றப்பட்டதை போன்று தமிழகத்தில் பெரியார் சிலை அகற்றப்படும் என்று பாஜக தேசிய செயலாளர் ராஜா தெரிவித்திருந்தார்.

இக்கருத்து தனது சமூக ஊடகத்தை கவனிப்பவர் தவறாக பதிந்துவிட்டார் என கூறி வருத்தம் தெரிவித்துள்ளார் ராஜா.
இந்நிலையில், “ஹெச்.ராஜாவே தனக்கு தெரியாமல் தனது உதவியாளர் இந்தக் கருத்தை பதிவு செய்துவிட்டதாகத் தெரிவித்துவிட்டார்.
இருந்தாலும் அவருக்குத் தெரியாமல் அவரது உதவியாளர் வெளியிட்டது கண்டனத்துக்குரியது.பெரியார் தமிழகத்தின் பொக்கிஷம். தாழ்த்தப்பட்ட ஒடுக்கப்பட்ட மக்களின் அடிப்படை உரிமைகளைப் போராடி மீட்டவர்.’’ என்று தெரிவித்தார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி.
முதல்வருக்கு அருகிலேயே நின்ற துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறுகையில்,
”ஹெச்.ராஜா பெரியார் பற்றி கூறிய கருத்து கண்டனத்துக்குரியது.தன்னுடைய உதவியாளர்தான் அந்தக் கருத்தைப் பதிவேற்றம் செய்தார் என்று சொல்லியிருப்பது அபத்தமானது. அதை ஏற்க முடியாது. எனவே ஹெச்.ராஜா இதுகுறித்து பொதுமன்னிப்பு கேட்க வேண்டும். என்றார்.
பெரியாரால்தான் இன்று சாதாரண ஆள் கூட முதலமைச்சராகவும், அமைச்சராகவும் இருக்கக் கூடிய சூழல் நிலவுகிறது என்றும் பன்னீர்செல்வம் குறிப்பிட்டார்.பாஜகவை அனுசரிப்பதில் இரு தலைவர்களுக்கும் உள்ள நிலைப்பாட்டை இச்சம்பவம் வெளிக்காட்டுவதாக உள்ளதாகவும், இருவரின் கருத்து வேறுபாட்டை தெளிவாக்குவதாக இச்சம்பவம் உள்ளதாகவும் அரசியல் பார்வையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here