முத்தரப்பு கிரிக்கெட்! வங்கதேசத்தை வென்றது இந்தியா!

கொழும்பு: இலங்கை தலைநகர் கொழும்புவில் இந்தியா, இலங்கை, வங்காளதேசம் ஆகிய மூன்று நாடுகள் இடையிலான 20 ஓவர் கிரிக்கெட் போட்டி நடந்துவருகிறது.வியாழன்று நடந்த 2-வது லீக்கில் இந்திய அணி, வங்காளதேசத்தை எதிர்கொண்டது.
டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பீல்டிங்கை தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்த வங்காளதேசம் 8 விக்கெட்கள் இழப்பிற்கு 139 ரன்கள் எடுத்தது.அந்த அணி வீரர் லித்தோன் தாஸ் 34 ரன்கள் எடுத்தார். இந்திய அணியில் ஜெய்தேவ் உனட்கட் அதிகப்பட்சமாக 3 விக்கெட்டை கைப்பற்றினார்.

இந்திய அணிக்கு ஷிகர் தவான் மற்றும் ரோகித் சர்மா சிறப்பான தொடக்கத்தை தொடங்கினார். ஆட்டம் விறுவிறுப்பாக தொடங்கிய நிலையில் ரோகித் சர்மார் போல்ட் ஆகி 17ரன்களில் வெளியேறினார்.பின்னர் வந்த பேட்ஸ்மேன்கள் மூலம் 18.4 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 140 ரன்கள் எடுத்து இந்தியா அணி வெற்றிபெற்றது. அதிகபட்சமாக தவான் 55 ரன்களும் , சுரேஷ் ரெய்னா 28 ரன்களும் எடுத்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here