முஸ்லிம் சட்டவாரிய நிர்வாகி மீது தேசத்துரோக வழக்கு!

லக்னோ:முஸ்லிம் சட்டவாரிய செய்தித்தொடர்பாளர் மவுலானா சஜத் நோமானி மீது உத்தரப் பிரதேச போலீஸார் தேச துரோக வழக்கு பதிவு செய்துள்ளனர்.அகில இந்திய முஸ்லிம் சட்ட வாரியத்தின் ஆண்டு பொதுக்குழுக்கூட்டம் பிப்ரவரி 9-ம் தேதி ஹைதராபாத்தில் நடந்தது.
இந்தக் கூட்டத்தில் முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியத்தின் மூத்த தலைவரும், செய்தித்தொடர்பாளருமான மவுலானா சஜத் நோமானி, மத உணர்வுகளைப் புண்படுத்தும் விதத்தில் பேசியுள்ளார்.

மியான்மரில் ரோகிங்கிய முஸ்லிம்கள் சந்திக்கும் அவல நிலையை இந்திய முஸ்லிம்களுக்கும் ஏற்படுத்த முயற்சி நடக்கிறது.
முஸ்லிம்களுக்கு எதிராக பயன்படுத்த சிறிய கிராமங்களில் கூட ஆயுதங்கள், வெடி பொருட்கள் வழங்கப்பட்டுள்ளன’’ எனக் கூறியதாக தகவல்கள் வெளியாகின.இப்பேச்சு குறித்து சமூகவலைதளங்களில் பரவலாக விவாதிக்கப்பட்டது.
இதுதொடர்பாக உத்தரப் பிரதேச மாநில ஷியா வக்ப் போர்டு தலைவர் வாஸிம் ரிஸ்வி போலீஸாரிடம் புகார் அளித்தார்.மத உணர்வுகளை பாதிக்கும் வகையிலும், வன்முறையைத் தூண்டும் வகையிலும் நோமானி பேசியுள்ளதால் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகாரில் ரிஸ்வி குறிப்பிட்டுள்ளார்                                                                                    இதையடுத்து நோமானி மீது உத்திரப் பிரதேச போலீஸார் தேச துரோக வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here