பெட்ரோலில் கலப்படம்! விற்பனை நிலையம் முற்றுகை!!

சேலம்:வாகனங்களில் பெட்ரோலுக்கு பதில் தண்ணீரை நிரப்பியதாக பெட்ரோல் பங்க்கை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.
சேலம் கோரிமேடு பகுதியில் தனியார் பெட்ரோல் விற்பனை நிலையம் உள்ளது.தினந்தோறும் நூற்றுக்கணக்கான மக்கள் இங்கு பெட்ரோல், டீசல் நிரப்பிச் செல்கின்றனர். அந்தவாகனங்கள் நடுவழியிலேயே நின்றுவிடுகின்றன.
அவற்றை பழுதுபார்க்கும் மெக்கானிக்குகள் எரிபொருளில் கலப்படம் இருந்தால் இவ்வாறு பிரச்சனை ஏற்படும் என்று தெரிவித்துள்ளனர்.

இதனால் ஆத்திரமடைந்த மக்கள் பெட்ரோல் பங்கை முற்றுகையிட்டனர்.
பொதுமக்கள் குற்றச்சாட்டை மறுத்த பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் அவர்கள் முன்னிலையில் பெட்ரோல், டீசலை பரிசோதிக்க முன்வந்தனர்.
பெட்ரோல் சேமிப்பு கிடங்கில் பரிசோதனை செய்தபோது அதில் தண்ணீர் இருந்தது தெரியவந்தது.தங்கள் வாகனங்களுக்கு நஷ்டஈடு தரவேண்டும் என்று பொதுமக்கள் போராட்டத்தில் குதித்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. போலீசார் பொதுமக்களை சமாதானப்படுத்தி போராட்டத்தை கைவிடச்செய்தனர்.இதுகுறித்து இந்தியன் ஆயில் நிறுவனத்துக்கு தெரிவிக்கப்பட்டது.
அங்கிருந்து உயரதிகாரிகள் வரவழைக்கப்பட்டு பரிசோதனை நடைபெறவுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here