டூவீலரில் லிப்ட் கேட்ட பிரபல நடிகை!

ஹைதராபாத்: தமிழகம்,  கேரளாவில் பிரேமம் படம் மூலம் ரசிகர்களை கவர்ந்தவர் சாய் பல்லவி. ‘பிரேமம்’ என்ற மலையாளப் படத்தில் நடித்து இளைஞர்களின் கனவுகளையும் ஆக்கிரமித்தார்.
அப்படத்தில் மலர் டீச்சர் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

இவர் தற்போது விஜய் இயக்கிய ‘கரு’ படத்தில் நாகசூரியாவுக்கு ஜோடியாக நடித்துள்ளார். இதே படம் ‘கானம்’ என்ற பெயரில் தெலுங்கிலும் வெளியாக உள்ளது.இப்படத்திற்கான ப்ரீ ரீலிஸ் ஹைத்ராபாத்தில் நடைபெற்றது.
நிகழ்ச்சியில் கலந்துகொள்ள சாய்பல்லவி காரில் சென்றார். வழியில் கடுமையான போக்குவரத்து நெரிசலில் சிக்கி கொண்டார்.

நிகழ்ச்சி நடக்கும் இடத்திற்கு குறித்த நேரத்திற்குள் செல்ல வேண்டும் என்பதால் போனில் உதவியாளர் ஒருவரை அழைத்தார்.
நிகழ்ச்சி நடைபெறும் இடத்துக்கு சாய் பல்லவி பைக்கில் வந்து இறங்கியதை அங்கிருந்தோர் ஆச்சர்யமாக பார்த்தனர்.
சாய்பல்லவிக்கு லிப்ட் கொடுத்த வாலிபரை அதிர்ஷ்டசாலி என்று கலாய்த்தனர்.
சாய்பல்லவி ஸ்கூட்டரில் செல்லும் படங்கள்தான் ஹைதராபாத்தில் அதிகம் பகிரப்படுகின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here