ஸ்ரீதேவி மகள் ஜான்வி பிறந்தநாள் கொண்டாட்டம்!

மும்பை: நடிகை ஸ்ரீதேவியின் மூத்த மகள் ஜான்வி கபூர் தனது பிறந்தநாளை முதியோர் இல்லத்தில் எளிமையாக கொண்டாடினார்.உறவினர் திருமணத்தில் பங்கேற்க துபாய் சென்ற நடிகை ஸ்ரீதேவி, கடந்த வாரம் எதிர்பாராதவிதமாக உயிரிழந்தார்.  மார்ச் 1 அவரது இறுதிச்சடங்குகள் நடந்தன.சினிமாத்துறையில் தனது வாரிசாக மூத்தமகள் ஜான்விகபூர் இருக்கவேண்டும் என ஸ்ரீதேவி விரும்பினார்.
அதனை பூர்த்திசெய்யும் வகையில் ஜான்வி திரைப்படத்தில் நடிக்க தொடங்கியுள்ளார்.
அவர் முதல் படம் ரிலீசுக்கு தயாராகி வருகிறது.

மகள் தனது லட்சியத்தை நிறைவேற்றுவதை பார்ப்பதற்கு முன்னரே ஸ்ரீதேவி மறைந்தார்.
தாயுடன் கடந்த 20ஆண்டுகள் தவறாமல் பிறந்தநாள் கொண்டாடியவர் ஜான்வி.
21வது பிறந்தநாளை மும்பை முதியோர் இல்லத்தில் கொண்டாடினார்.
அவர் கேக்வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய விடியோ, படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

தனது அம்மா இருந்தால் எப்படி எல்லோருக்கும் அன்பை செலுத்தி பிறந்தநாளில் ஏழை எளியோருக்கு உதவியிருப்பாரோ அதைப்போன்று என் பிறந்தநாளை கொண்டாட முடிவெடுத்தேன் என்று ஜான்வி கபூர் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here