இன்ஸ்பெக்டர் கொடூர தாக்குதல்! கர்ப்பிணி நடுரோட்டில் பலி!

திருச்சி: இன்ஸ்பெக்டர் கொடூரமாக நடந்துகொண்டதால் கர்ப்பிணி பெண் ஒருவர் பலியானார்.

திருச்சி திருவெறும்பூர் பகுதியில் உள்ள கணேசா ரவுண்டானாவில் புதன்கிழமை இரவு  போக்குவரத்து போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டுவந்தனர்.

அப்போது சாலைவிதிகளை மீறி வேகமாக ஒரு மோட்டார் சைக்கிள் வந்துள்ளது.

அதனை நிறுத்த இன்ஸ்பெக்டர் காமராஜ் முயன்றுள்ளார். அதனை மோட்டார் சைக்கிள் ஓட்டிவந்தவர் கவனிக்காமல் தொடர்ந்து சென்றார்.  ஆத்திரமடைந்த காமராஜ் மோட்டார் சைக்கிளை துரத்திச்சென்று அதனை உதைத்துள்ளார்.

இதனால் நிலைதடுமாறிய வாகனம் நடுரோட்டில் விழுந்தது. அதில் வந்த கர்ப்பிணிப்பென் சாலையில் விழுந்து தலையில் பலத்த அடிபட்டது. அவ்வழியே வந்த வேனும் அப்பெண் மீது மோதியது. இதனால் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார்.

இன்ஸ்பெக்டர் அந்த இடத்தில் இருந்து தப்பிச்சென்றார்.  அவரை உடனடியாக கைதுசெய்ய வலியுறுத்தி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.   அவர்களிடம் சமாதானப்பேச்சு வார்த்தை நடத்த உயரதிகாரிகள் வந்தனர். மக்கள் அவர்கள் மீது செருப்பு வீசி கோஷங்கள் இட்டனர்.

 

ஒரு மணிநேரத்துக்குள் காமராஜர் சரண்டர் ஆனார். அவரை போலீசார் கைதுசெய்துவிட்டனர் என்று தகவல் தெரிவிக்கப்பட்டது.

மோட்டார் சைக்கிளில் வந்தவர்கள் ராஜா – உஷா தம்பதி என்றும் உஷா 3மாத கர்ப்பிணி என்றும் தெரியவந்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here