வந்துட்டேன்னு சொல்லு! பேஸ்புக், இன்ஸ்டாகிராமில் ரஜினி!!

சென்னை:நடிகர் ரஜினிகாந்த் சமூக ஊடகத்தில் தனது பரப்பை விரிவுபடுத்தியுள்ளார்.
அரசியல் ஈடுபட்டுள்ள ரஜினிகாந்த், கட்சிக்கு பலமான அஸ்திவாரம் அமைக்க மாவட்ட வாரியக தனது ரசிகர்களை சந்தித்து வருகிறார்.தனது அரசியல் பணிகளை முன்னெடுப்பதற்காக இணையதளம் ஒன்றையும் தொடங்கினர்.
இந்நிலையில் ட்விட்டரில் மட்டும் கணக்கு வைத்திருந்த ரஜினி பேஸ்புக், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் தனது அதிகாரப்பூர்வ கணக்கை தொடங்கியுள்ளார்.

புதிதாக கணக்கைத் துவங்கியிருக்கும் ரஜினிகாந்தை பின்தொடர்பவர்கள் அதிகரித்து வருகிறார்கள்.
ட்விட்டரில் ரஜினியை பின்தொடர்வோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. ட்விட்டரில் 4.58 மில்லியன் பேர் ரஜினியை பின் தொடர்கின்றனர்.ரஜினிஇன்ஸ்டாகிராமில் ‘கபாலி’ படத்தின் புகைப்படம் ஒன்றைப் பதிவிட்டு, ‘வணக்கம் வந்துட்டேன்னு சொல்லு’ என்று குறிப்பிட்டுள்ளார்.                                            சென்னையில் நடைபெற்ற எம்ஜிஆர் திறப்புவிழாவில் பேசிய ரஜினிகாந்த், இளைஞர் சக்தி, தொழில்நுட்பம் உதவியுடன் அரசியலில் இறங்க உள்ளதாக தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here