பிரதமருக்கு மரியாதை தரவில்லை! எல்லை வீரரின் சம்பளம் ‘கட்’

கொல்கத்தா: பிரதமர் மோடிக்கு மரியாதை கொடுக்காத ராணுவ வீரருக்கு அபராதம் விதிக்கப்பட்டு ஒருவார சம்பளம் பிடித்தம் செய்யப்பட்டுள்ளது.

மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள மஹத்பூரில் எல்லைப் பாதுகாப்புப் படை 15ஆவது பட்டாலியன் தலைமையகம் உள்ளது.
அங்கு வீரர்களுக்கு தினமும் ஜீரோ பரேடு பயிற்சி நடைபெறும்.கடந்த மாதம் 21ஆம் தேதி நடைபெற்ற இந்தப் பயிற்சியில் ஈடுபட்ட சஞ்சீவ் குமார் என்ற வீரர் பரேடின்போது “மோடி நிகழ்ச்சி” என்று கூறியுள்ளார்.
மாண்புமிகு பிரதமர் மோடியின் நிகழ்ச்சி என்று மரியாதையாகக் கூறவில்லை என்று அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டது.

எனவே, பிரதமரை அவமரியாதை செய்ததாக சஞ்சீவ்குமார் மீது பட்டாலியனின் தலைமை அதிகாரி அனுப் லால் பஹத் ஒழுங்கு நடவடிக்கை எடுத்துள்ளார்.
சஞ்சீவ் குமார் மீது பிரிவு 40இன் கீழ் சட்டத்திற்குப் புறம்பாக நன்னடத்தையை மீறிச் செயல்பட்டதாக ஒழுங்குநடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அவரது ஒருவார சம்பளமும் பிடித்தம் செய்யப்பட்டுள்ளது. இந்தச் செயல் மற்ற ஜவான்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here