கம்யூனிஸ்டுகளுக்கு எதிராக பாஜக சதி! கேரள முதல்வர் குற்றச்சாட்டு!

திருவனந்தபுரம்: திரிபுராவில் பாஜக ஆட்சி அமைக்கவுள்ளதை தொடர்ந்து அங்குள்ள லெனின் சிலை அகற்றப்பட்டது. கம்யூனிஸ்ட் தொண்டர்கள் மீதும் பாஜகவினர் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இச்செயல்களுக்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார்.
திரிபுராவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களும், லெனின் சிலை அகற்றப்பட்ட நிகழ்வும், தேசிய அளவில் கம்யூனிஸ்டுகளுக்கு எதிராக நடக்கும் சதியாகும்.

நான்குசிலைகளை அகற்றிவிட்டால் இந்த நாட்டில் இருந்து கம்யூனிஸ்டுகளை ஒழித்துவிடலாம் என பாஜகவும், ஆர்எஸ்எஸ். அமைப்பும் நினைக்கிறார்கள்.
ஆனால் கம்யூனிஸ்டுகளை இந்த நாட்டில் இருந்து அகற்றவே முடியாது.நாட்டில் ஜனநாயகத்தையும், மதச் சார்பற்ற தன்மையையும் இன்னும் பாதுகாப்பாக இருந்து வருவது கம்யூனிஸ்டுகளால்தான்.
இதற்காக ஏராளமான உயிர் தியாகத்தை கம்யூனிஸ்டுகள் செய்து இருக்கிறார்கள். இவ்வாறு விஜயன் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here