ரத்ததானம் செய்வோர் மோசடி செய்யப்படுகிறார்களா?

சென்னை:மனித உடலில் உற்பத்தி செய்ய முடியாத ஒன்று ரத்தம். இதனை பலர் தானமாக கொடுப்பதை கடமையாக கொண்டுள்ளனர்.

பல தன்னார்வலர்கள் மற்றும் தன்னார்வ அமைப்புகள் ஆங்காங்கே முகாம் நடத்தி இரத்தம் சேகரித்து கொடுக்கிறார்கள். தானமாக பெறப்பட்ட இரத்தம் முப்பது நாட்களுக்குள் உபயோகப்படுத்தவில்லை என்றால் கெட்டுவிடும்.

ஆனால் இதை பெறும் சில தனியார் நிறுவனங்கள் தவறான முறையில் பயன்படுத்துவதாக புகார்கள் தெரிவிக்கப்பட்டு வருகின்றன.
ஒருவருக்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டியிருக்கிறது என்றால் சுமார் மூன்று யூனிட் அளவுக்கு அவரின் உறவினர்களிடம், நண்பர்களிடம் பெறப்படுகிறது.ஆனால், மருத்துவ மனை ரத்தவங்கியில் உள்ள இரத்தத்தையே நோயாளிக்கு பயன்படுத்துகிறார்கள்.
இன்னாரது ரத்தம் பெறப்பட்டது தங்களுக்கு தரப்பட்டது என்ற விபரத்தை நோயாளிகளுக்கு தெரிவிக்கவேண்டும். ஆனால் நடைமுறையில் இதனை யாரும் செயல்படுத்துவதில்லை.
ஒருவருடமிருந்து பெறப்படும் ஒரு யூனிட் ரத்தம் மீண்டும் புதிதாக உடலில் சுரப்பது சாதாரண விஷயமல்ல.வழக்கமாக நாம் உண்ணும் உணவில் உற்பத்தியாகும் ரத்தத்தின் அளவு மிகவும் குறைவே. உடலில் ரத்தம் ஊறுவதற்காக இரும்புச் சத்து மற்றம் ஊட்டச்சத்து மிக்க உணவுகளை பல மாதங்கள் தொடர்ந்து சாப்பிட்டு ஓய்வும் எடுக்க வேண்டும்.
ரத்ததானம் செய்யும் பலருக்கு மயக்கம் வரும் என்பதை மருத்துவத்துறை வெளிப்படையாக ஒப்புக் கொள்கிறது. சிலருக்கு கை, கால்களுக்கு இரத்த ஓட்டம் கிடைக்கவில்லை என்றால் மறத்துப்போவதும் உண்டு.

மூளைக்கு இரத்த ஓட்டம் தடைபட்டால் ரத்ததானம் செய்பவர் நிலைமை மிகவும் மேசமாகிவிடும். ஆனால் மருத்துவத்துறை சார்ந்தவர்களுக்க இச்சாதக பாதக விளைவுகளை கணிக்கும் திறன் இருப்பதால் அவர்கள் ரத்ததானம் செய்ய தயங்குவர்.
எனவே, ஆரோக்கியமாக இருந்தாலும் அவர்கள் ரத்ததானம் செய்வதை பெரும்பாலும் தவிர்க்கின்றனர்.
அவசர காலங்களில் கூட மருத்துவமனை பணியாளர் ஒருவர் ரத்ததானம் வழங்கி உயிர்காக்க உதவினார் என்ற செய்தி கேள்விப்படுவதில்லை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here