பட்டப்பகலில் நீதிபதிக்கு கத்திக்குத்து! பெங்களூரில் பரபரப்பு !!

பெங்களூர்:நீதிமன்றத்தில் புகுந்து நீதிபதியை கத்தியால் குத்திய வாலிபர் கைது செய்யப்பட்டார்.
கர்நாடகாவில் லோக் ஆயுக்தா நீதிபதியாக பணியாற்றிவருபவர் வி. ஷெட்டி(74).இன்று மதியம் வழக்குகளை விசாரித்துவிட்டு தனது அறையில் சாப்பிட சென்றார்.
அப்போது தேஜஸ் ஷர்மா என்ற வாலிபர் நீதிபதி அறைக்குள் புகுந்தார்.
அவர் வைத்திருந்த கத்தியால் சரமாரியாக நீதிபதியை குத்தினார்.

இச்சம்பவம் நடைபெறும் முன்னர் நீதிபதியை சந்திக்க வேண்டும் என்று தும்கூரை சேர்ந்த தேஜஸ் ஷர்மா வருகை பதிவேட்டில் பதிவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
தாக்குதலில் அலறியவாறு மயங்கி சரிந்த நீதிபதி தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

அவரை முதல்வர் சித்தராமையா, உள்துறை அமைச்சர் ராமலிங்க ரெட்டி ஆகியோர் சந்தித்து ஆறுதல் கூறினார்.
இச்சம்பவம் அதிர்ச்சியை தருகிறது. குற்றவாளி மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.நீதிமன்றத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்படும் என்று சித்தராமையா தெரிவித்துள்ளார்.
நீதிபதி வி.ஷெட்டி அபாயகட்டத்தை தாண்டிவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.  தேஜஸ் ஷர்மா கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here