ஆபாச படத்தில் மூழ்கிய மகன்! கையை வெட்டினார் தந்தை!

ஹைதராபாத்: செல்போனில் தொடர்ந்து ஆபாசப்படங்கள் பார்த்துவந்த மகனின் கையை வெட்டியுள்ளார் தந்தை.
இந்த அதிர்ச்சிதரும் சம்பவம் நடந்துள்ளது ஹைதாராபாத்தின் பஹடி ஷரீப் என்ற இடத்தில்.இப்பகுதியில் இறைச்சிக்கடை நடத்தி வருபவர் மொஹம்மத் கையூம் குரேஷி (45). இவரது மகன் காலித் (19). தங்கள் பகுதியில் உள்ள கேபிள் ஆபரேட்டர் ஒருவரிடம் உதவியாளராக பணிபுரிந்து வந்தார்.அலைபேசியில் தொடர்ந்து திரைப்படங்கள் மற்றும் ஆபாசப் படங்கள் பார்ப்பது காலித்தின் பொழுதுபோக்கு. இதனால் வேலைக்கும் சரியாகப் போகாமல் இருந்துவந்தார்.
இரவில் கண்விழித்து காலித் தொடர்ந்து இத்தகைய செயல்களில் ஈடுபட்டு வந்தது அவரது தந்தை குரேஷிக்கு கடும் கோபம் ஏற்படுத்தியது.காலித்துக்கு அறிவுரைகள் சொல்லியும் அவர் கேட்கவில்லை. கடந்த இரு தினங்களுக்கு முன்பாக காலித்துக்கும், குரேஷிக்கும் இடையே இது தொடர்பாக கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
ஞாயிறன்று காலித் வீட்டில் உறங்கிக் கொண்டிருக்கும் பொழுது,இறைச்சிக் கடைகளில் பயன்படுத்தும் கத்தியால் காலித்தின் வலது கையை மணிக்கட்டுக்கு சற்று மேலாக குரேஷி துண்டித்தார். பின்னர் அங்கிருந்து தப்பி விட்டார். போலீசார் திங்களன்று குரேஷியை கைது செய்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here