வளைகுடா கூட்டமைப்பில் மீண்டும் கத்தார்!

கத்தார்: வளைகுடா நாடுகள் கூட்டமைப்பில் கத்தார் நாட்டை மீண்டும் இடம்பெறச்செய்வதற்கான பேச்சுவார்த்தை தொடங்கப்பட்டுள்ளது.
கடந்த ஜூன் 5ம் தேதி வளைகுடா கூட்டமைப்பில் உள்ள நாடுகள் கத்தாருடன் ராஜிய உறவை துண்டித்தன.

கத்தார் அரசு தீவிரவாத அமைப்புகளுக்கு உதவுவதாக அவை குற்றம் சாட்டின.
மீண்டும் கூட்டமைப்பில் இணைய அவை நிபந்தனைகள் விதித்தன.
அவற்றை கத்தார் ஏற்கமறுத்தது. தனியொரு நாடாக தனது பொருளாதாரத்தை பலப்படுத்தும் நடவடிக்கையில் இறங்கியது.


கச்சாஎண்ணெய் சந்தையின் ஏற்ற இறக்கங்கள், உள்நாட்டு உற்பத்தி குறைவு ஆகிய காரணங்களால் வளைகுடா நாடுகளில் பொருளாதாரம் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.
இயற்கை எரிவாயு வளம் அதிகமாக வைத்துள்ள கத்தாரின் உதவி தங்களுக்கு தேவை என்று அவை உணர்ந்துள்ளன.இப்பிரச்சனையில் மத்தியஸ்தம் செய்துவந்த குவைத், அமெரிக்கா நாடுகள் கத்தாருடன் அரபுநாடுகள் உறவை புதுப்பிக்கும் முயற்சியில் மீண்டும் இறங்கியுள்ளன.
முதற்கட்டமாக அரபுநாடுகள் வான்வழி தடை நீக்கி இருநாட்டு மக்களும் வந்துசெல்ல அனுமதிக்கப்படுவார்கள் என தெரியவந்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here