காதல் ஜோடிக்கு கொடூர தண்டனை!

பாட்னா: வெளிநாட்டு பெண்ணை திருமணம் செய்துகொண்ட வாலிபருக்கு பஞ்சாயத்தார் நூதன தண்டனை அளித்தனர்.

பீகார் தலைநகர் பாட்னாவில் இருந்து 97கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது சுபால் கிராமம்.
அக்கிராமத்தை சேர்ந்த வாலிபர் சங்கீத் குமார். சுபால் கிராமத்துக்கு அகதியாக வந்த நேபாளத்தை சேர்ந்த பெண்ணை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.
காதல் ஜோடி ஒருமாதம் சென்றபின் ஊர் திரும்பியது.அவர்கள் பஞ்சாயத்தில் குற்றவாளிகளாக நிறுத்தப்பட்டனர்.
அத்தம்பதிக்கும், அவர்கள் திருமணத்துக்கு உதவியவர்களுக்கும் தண்டனை வழங்கப்பட்டது.
சங்கீத்குமாரும், அவரது நண்பர்களும் தோப்புக்கரணம் போட்டனர்.அப்பெண் தனது உமிழ்நீரை சாலையில் துப்பி அதனை மீண்டும் நக்கவேண்டும் என்று கொடூர தண்டனை வழங்கப்பட்டது.
இதுகுறித்த விடியோ இணையத்தில் வெளியாகியது. பஞ்சாயத்து நிர்வாகிகளை போலீசார் தேடிவருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here