அனிதா திரைப்படத்தில் ஜூலி!

சென்னை: நீட் தேர்வை எதிர்த்து வழக்குப்போட்ட மாணவி அனிதா தற்கொலை செய்துகொண்டார். அவரது வாழ்க்கை திரைப்படமாகி வருகிறது.அரியலூர் மாவட்டம், குழுமூர் கிராமத்தைச் சேர்ந்த சுமைதூக்கும் தொழிலாளி சண்முகம் (54). இவர் திருச்சி காந்தி சந்தையில் சுமை தூக்கும் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவரது மகள் அனிதா.பிளஸ் 2 தேர்வில் அனிதா 1200-க்கு 1,176 மதிப்பெண்கள் பெற்றிருந்தார். ஆனால், நீட் தேர்வு முடிவில் இவர் 700-க்கு 86 மதிப்பெண்கள் மட்டுமே பெற்றதால் மருத்துவம் படிக்க வாய்ப்பு கிடைக்கவில்லை. இவரது மருத்துவ கட் ஆப் மதிப்பெண் 196.75 .தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த இவருக்கு பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் சேர்க்கை நடந்திருந்தால் மருத்துவம் படிக்க வாய்ப்பு கிடைத்திருக்கும்.
இதனால் மனமுடைந்த அனிதா தற்கொலை செய்துகொண்டார்.இவரது வாழ்க்கையை கதைக்களமாக கொண்ட டாக்டர்.எஸ்.அனிதா எம்பிபிஎஸ் என்ற படமெடுக்கப்பட்டு வருகிறது. அதில் இளம் நடிகை ஜூலி கதாநாயகியாக நடிக்கிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here