சசிகலாவுக்கு இனி வாய்தா இல்லை!

சென்னை:சசிகலாவுக்கு இனி வாய்தா கிடையாது என்ற முடிவுக்கு வந்துள்ளது ஆறுமுகச்சாமி விசாரணை ஆணையம்.
ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகச்சாமி தலைமையிலான ஆணையம் விசாரித்து வருகிறது. பல்வேறு தரப்பினருக்கும் சம்மன் அளித்து அவர்களிடம் விசாரித்து வருகின்றது.

பெங்களூர் சிறையில் உள்ள சசிகலா தனது வாக்குமூலத்தை பிரமாணப் பத்திரமாக தாக்கல் செய்ய ஆறுமுகச்சாமி ஆணையம் சம்மன் அனுப்பியிருந்தது. ஆனால், சசிகலா சார்பில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்வதில் இழுத்தடிக்கப்பட்டது.இந்நிலையில், கால அவகாசம் கோரி சசிகலா அளித்த மனுவை விசாரணை ஆணையம் தள்ளுபடி செய்துள்ளது.

ஏற்கனவே, ஐந்து முறை அவகாசம் நீட்டிக்கப்பட்டும் சசிகலா பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்யவில்லை. போதிய அவகாசம் கொடுக்கப்பட்டும் கால தாமதம் செய்வதே சசிகலா தரப்பின் குறிக்கோளாக தெரிகிறது.
உரிய காலத்திற்குள் பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்யப்படாவிட்டால் சசிகலாவிடம் நேரில் சென்று விசாரணை நடத்தப்படும் என ஆணையத்தலைவர் ஆறுமுகச்சாமி தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here