தமிழக அரசு ஒரு ஓட்டைப்படகு! கமல் கடும் தாக்கு!!

சென்னை: தமிழக அரசு ஓட்டைப்படகு என்று கடுமையாக விமர்சித்துள்ளார் மக்கள் நீதிமய்யம் தலைவர் கமல்.
அவரது கட்சியில் இன்று சேரவந்திருந்த கல்லூரி மாணவ மாணவிகள் மத்தியில் அவர் பேசியதாவது:தமிழக அரசு தற்பொழுது இலவச ஸ்கூட்டர் வழங்கி வருகிறது. மக்கள் வேலை இல்லாமல் அலைந்துகொன்டு இருக்கும் பொழுது ஸ்கூட்டர் எதற்கு?
இலவசத்துக்கு நிற்கும் இந்த அவலமானது உங்கள் தலைமுறையோடு போகட்டும். அடுத்த தலைமுறைக்கு வேண்டாம்.
நான் நீங்களே ஸ்கூட்டர் வாங்கும் நிலையை உருவாக்குவேன்.அரசு செய்ய வேண்டிய கல்வி சேவையை தனியாரும், தனியார் வசம் இருக்க வேண்டிய மது விற்பனையை அரசும் செய்து வரும் அவலம் இங்குதான் நிகழ்ந்து வருகிறது.
மது இல்லாமல் இருக்க முடியாது என்ற நிலையை இந்த அரசு உருவாக்கி உள்ளது.
மக்களின் தேவைகளை நிறைவேற்றாத இந்த அரசு ஓட்டைப்படகு போல மூழ்கும்.

அரசியல் வேண்டாம் என்று ஒதுங்கி இருந்தேன். ஆனால் சேராமல் இருந்தால் அது தவறு என்று உணர்ந்து சேர்ந்து விட்டேன். அரசியலை சுத்தம் செய்ய இதுவே சரியான நேரம்.அரசியலில் தலைவராக மாற விரும்பும் உங்களை போன்ற மாணவர்கள் முதலில் தொண்டு செய்ய கற்றுக் கொள்ள வேண்டும்.
நமது கடமைகளை உணர்ந்து முதலில் வரிகள் கட்ட வேண்டும்.
இவ்வாறு கமல் பேசினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here