டுவிட்டர் கருத்துக்களால் சர்ச்சைக்குள்ளான நடிகை!

சென்னை: ஜாதிக் கலவரத்தை தூண்டுவதாக நடிகை கஸ்தூரி மீது காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
பிரபல சமூக வலைத்தளமான டிவிட்டரில் நடிகை கஸ்தூரி தொடர்ந்து பல்வேறு விஷயங்களில் கருத்துக்கள் தெரிவித்து பரபரப்பாக இயங்கிவருகிறார்.

விழுப்புரம் வேலாம்புதூரில் நடந்த தலித் சிறுவன் படுகொலை, அவனது தாய் மீது தாக்குதல்தொடர்பாக டுவிட்டரில் கருத்து தெரிவித்திருந்தார்.
அதில் கொலைக்கும்பல் குறித்துப் பதிவிடும் பொழுது ஒரு குறிப்பிட்ட சமூகம் குறித்து சொல்வது போல கருத்துக் கூறினார்.
பின்னர் அது எழுத்துப்பிழையின் காரணமாக நேர்ந்தது என்று கூறி, அந்தப் பதிவினை நீக்கி விட்டார். அது தொடர்பாக அவர் விளக்கமும் தெரிவித்திருந்தார்.

இருப்பினும் கஸ்தூரி மீது சத்திரியர் பேரவை சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
நடிகை ஸ்ரீதேவி மரணத்தை தொடர்ந்து மீடியாக்களில் அவரது நினைவாக பாடல்கள் ஒளிபரப்பாகின.

அதுகுறித்து பதிவிட்டிருந்த கஸ்தூரி, சன்னிலியோன் மரணத்தை தொடர்ந்து எப்படிப்பட்ட பாடல்கள் மீடியாவில் வெளியாகும் என்று நினைத்து கவலைப்படுவதாக தெரிவித்திருந்தார்.
அந்த டுவிட்டும் கடும் கண்டனத்தை அவருக்கு தந்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here