காவிரி, வங்கிமோசடி பிரச்சனை! நாடாளுமன்றம் முடங்கியது!

டெல்லி: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி தமிழகத்தைச்சேர்ந்த அதிமுக எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டனர். இதனால் மாநிலங்களவை ஒத்திவைக்கப்பட்டது.

இதேபோல பஞ்சாப் நேஷனல் வங்கி வழக்கு தொடர்பாக எம்பிக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் மக்களவையில் அலுவல் ஏதும் நடைபெறவில்லை.பட்ஜெட் கூட்டத் தொடர் இரண்டாவது கட்டமாக இன்றுகாலை தொடங்கியது. பல்வேறு பிரச்சனைகள் தொடர்பாக எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டதால் மக்களவை மற்றும் மாநிலங்களவை இரண்டும் மதியம் 12 மணிவரை ஒத்திவைக்கப்பட்டன.மக்களவை இன்று காலை கூடியதும், பஞ்சாப் நேஷனல் வங்கி மோசடி மற்றும் ஆந்திரப் பிரதேசத்திற்கு தனி அந்தஸ்து அளிக்கும் விவகாரம் பிரச்சனை தொடர்பாக எம்பிக்கள் கோஷமிட்டனர். அவையில் அமளி ஏற்பட்டது.மக்களவையில், எதிர்க்கட்சி எம்பிக்கள், ரூ.12,600 கோடிக்கும் மேலாக வைர வியாபாரி நிரவ் மோடி மற்றும் அவரது உறவினர் முகுல் சோக்சி ஆகிய இருவரும் வங்கி மோசடியில் ஈடுபட்டு நாட்டைவிட்டு தப்பியோடிவிட்டனர் என முழக்கமிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.மாநிலங்களவையில், அதிமுக உறுப்பினர்கள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரியும் ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து கோரியும் தெலுங்கு தேசக் கட்சி எம்பிக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் அமளி ஏற்பட்டு அவை ஒத்திவைக்கப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here