திண்டுக்கல்:அரசாங்கம் டாஸ்மாக்கை நடத்தவில்லை என்றால் கள்ளச்சாராயம் குடித்து மக்கள் இறப்பு தொடர்ந்துவரும் என்று அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
திண்டுக்கல்லில் அதிமுக சார்பில் நடந்த கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கூறியதாவது:இங்கு அமர்ந்திருக்கும் தாய்மார்களுக்கு தெரியும் டாஸ்மார்க் இல்லை என்றால் கள்ளச்சாராயம் குடித்து குடிகாரர்கள் இறந்து போய் இருப்பார்கள்.
குடிக்காமல் இருப்பவர்களால்தான் குடிக்காமல் இருக்க முடியும்.குடிகாரர்கள் அவர்களாகவேத்தான் குடிப்பதை நிறுத்தி திருந்த வேண்டும் என கூறினார்.
அமைச்சரின் இந்த பேச்சு சர்ச்சையை கிளப்பியுள்ளது.
அவர் பேசியது டாஸ்மாக் விற்பனையை மேலும் அதிகப்படுத்துவதற்காகவா என்று இணையத்தில் பலர் கேள்வி எழுப்பியுள்ளனர்.
உள்நாட்டு மதுவகைகளை விற்பதற்காக 1983ல் முதல்வர் எம்ஜிஆரால் துவக்கப்பட்டது டாஸ்மாக்.
மதுவிற்பனையை டாஸ்மாக் மூலமாக மட்டுமே நடத்த 2003ல் முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.
டாஸ்மாக் 2018 புத்தாண்டு தினத்தன்று மட்டும் ரூ.203கோடிக்கு மதுவிற்பனை செய்துள்ளது.
தமிழக அரசுக்கு வருவாய் ஈட்டித்தரும் முக்கியமான அம்சமாக டாஸ்மாக் உள்ளது குறிப்பிடத்தக்கது.