பழங்கள் வழியாக பரவும் பாக்டீரியா! பகீர் தகவல்!!

சென்னை:கோடை உஷ்ணத்தில் இருந்து தப்பிக்க சாலையோரம் விற்கப்படும் முலாம்பழம், தர்ப்பூசணி ஆகியவற்றை சாப்பிடுவோர் உஷாராக இருக்க வேண்டும்.
அசுத்தமான இப்பழங்களில் வளரும் பாக்டீரியாக்கள் உயிர்க்கொல்லியாக மாறியுள்ளன.

அனைத்து நகரங்களிலும் கோடை துவங்கிவிட்டால் பழங்கள், ஜூஸ், சாலட் ஆகியவை விற்பதற்காக தெருவோர கடைகள் பெருகி வருகின்றன.
இதமாக இருப்பதற்காக இவற்றை வாங்கி சாப்பிடுவோர் உஷாராக இருக்க வேண்டும்.
முறையாக சுத்தப்படுத்தப்படாத பழங்களில் லிஸ்டிரீயா என்ற பாக்டீரியா அதிகம் காணப்படுகிறது.

இதை சாப்பிடும் எதிர்ப்பு சக்தியில்லாதவர்கள் உடலில் பல்கிப்பெருகி அவர்கள் உடலில் ஆரோக்கிய குறைவை ஏற்படுத்துகிறது.
லிஸ்டீரியா உயிரிழப்பை ஏற்படுத்தும் வகையில் அபாயகரமானது என்று டாக்டர்கள் தெரிவிக்கின்றனர்.

காய்ச்சல், குளிர், தசை வலி, குமட்டல், வயிற்றுப்போக்கு ஆகியவை இதன் அறிகுறிகளாகும்.
ஆஸ்திரேலியாவில் இப்பாக்டீரியாக்கள் முதலில் கண்டறியப்பட்டன. தற்போது உலகின் பலநாடுகளிலும் இவை பெருகிவிட்டன என டாக்டர்கள் தெரிவித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here