2.0 பட டீசர் இணையத்தில் ’லீக்’!

சென்னை: நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள 2.0 படத்தின் டீசர் இணையத்தில் லீக் ஆகி பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.
ரூ.450கோடி செலவில் எடுக்கப்பட்டுள்ள அறிவியல் புனைகதை சினிமா 2பாயிண்ட் சீரோ(2.0) ஆகும். எந்திரன் படத்தின் இரண்டாவது பாகமாக இப்படம் தயாரிக்கப்பட்டது.

ரஜினிகாந்த் ஜோடியாக எமிஜாக்சனும், வில்லனாக இந்தி நடிகர் அக்ஷய்குமாரும் நடித்துள்ளனர்.
படம் எடுக்கப்பட்டு ரிலீசுக்கு தயாரான நிலையில் பாகுபலி2 வெளியானது.
அதனை விடவும் சிறப்பான கிராபிக்ஸ் தனது படத்தில் இடம்பெறவேண்டுமென இயக்குநர் சங்கர் விரும்பினார்.

இதனால் படத்தில் கிராபிக்ஸ் காட்சிகள் மீண்டும் பலகோடி செலவில் புதுப்பிக்கப்பட்டன.
இப்பணிகள் முடிவடையாததால் ஏப்ரல் 27ல் படம் ரிலீசாவது ஒத்திவைக்கப்பட்டது.
அன்றைய தினம் காலா வெளியாகிறது.
இதற்கிடையே 2.0படத்தின் டீசர் இணையத்தில் அதிகாரபூர்வமற்ற நிலையில் வெளியாகி பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில், நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள 2.0 படத்தின் டீசர் இணையதளங்களில் லீக் ஆகியுள்ளது.
டீசரில் ரஜினிகாந்த் கண்ணாடியை இறக்கி குக்கூ என கூறுவது போல் காட்சி இடம் பெற்றுள்ளது.
1.27 நிமிடம் கொண்ட டீசர் வெளியாகி படக்குழுவினரை அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது. விருதுவிழா ஒன்றில் காட்டப்பட்ட டீசர் இது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here