காங்கிரஸ் அதலபாதாளம் சென்றுவிட்டது! மோடி கிண்டல்!!

டெல்லி: காங்கிரஸ் கட்சி அதலபாதாளத்துக்கு சென்றுவிட்டது என்று தெரிவித்துள்ளார் பிரதமர் மோடி.
இதுகுறித்து பாஜக தொண்டர்களிடம் அவர் பேசியதாவது:
வடகிழக்கு மாநிலங்களின் மக்கள், தாங்கள் தனித்து விடப்பட்டவர்களாக கருதி வந்தனர். அந்த உணர்வை போக்கி உள்ளோம்.
ஒவ்வொரு வடகிழக்கு மாநிலத்துக்கும் ஒரு மத்திய மந்திரியை பொறுப்பாளராக நியமித்து, அம்மக்களின் பிரச்சினைகளை தீர்த்துவந்தோம்.ஊழலுக்கு எதிரான போரை நமது அரசு தொடர்ந்து முன்னெடுத்து செல்லும். சில அக்கறையுள்ள சக்திகள், இதை பழிவாங்கும் நடவடிக்கை என்று கூறுகிறார்கள். இது, பழிவாங்கும் நடவடிக்கை அல்ல, மக்கள் தீர்ப்பு அடிப்படையிலான நடவடிக்கை.
வடகிழக்கு மாநிலங்களில் கிடைத்த வெற்றி, கர்நாடகாவில் கிடைக்கப் போகும் வெற்றிக்கு கட்டியம் கூறுவதாக அமைந்துள்ளது.

காங்கிரஸ் தலைவருக்கு அவரது பதவியால் அந்தஸ்து உயர்ந்துள்ளது. ஆனால், அந்த கட்சியின் அந்தஸ்து, தொடர் தேர்தல் தோல்விகளால் அதலபாதாளத்துக்கு சென்று விட்டது. இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.திரிபுரா, நாகாலாந்து, மேகாலயா ஆகிய 3 வடகிழக்கு மாநிலங்களின் சட்டசபைகளுக்கு கடந்த மாதம் தேர்தல் நடைபெற்று நேற்று முடிவுகள் வெளியாகின.
திரிபுராவில் பாஜக 35இடங்களிலும், கூட்டணி கட்சியான திரிபுராபூர்வகுடி மக்கள் முன்னணிக்கு8 இடங்களும் கிடைத்தன.நாகாலாந்தில் தேர்தல் நடந்த நாகா மக்கள் முன்னணிக்கு 27 இடங்களும், பாரதீய ஜனதாவுக்கு 12 இடங்களும் கிடைத்தன. நாகா மக்கள் முன்னணி பாஜகவுடன் இணைந்து ஆட்சியமைக்க உள்ளது.

மேகாலயா மாநிலத்தில் தேர்தல் நடைபெற்ற 59 தொகுதிகளில் ஆளும் காங்கிரஸ் கட்சி 21 இடங்களிலும், தேசிய மக்கள் கட்சி 19 இடங்களிலும் வெற்றி பெற்றன. பாரதீய ஜனதாவுக்கு 2 இடங்கள் கிடைத்தன. பிற சிறிய கட்சிகளுக்கு 14 இடங்கள் கிடைத்தன. 3 தொகுதிகளில் சுயேச்சை வேட்பாளர்கள் வெற்றி பெற்றனர். காங்கிரசும், பாஜகவும் ஆட்சியமைக்க பேச்சுவார்த்தை நடந்துவருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here